குறுந்தொகை: பாடல் 224

குறுந்தொகை 224 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

கவலை யாத்த அவல நீள் இடைச்

சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா

நோயினும் நோய் ஆகின்றே-கூவற்

குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட

உயர்திணை ஊமன் போலத்

துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.

பிரிவிடை ''இறந்துபடும்'' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.

கூவன் மைந்தன்

கவலை - கவர்த்த வழி

யாத்த - (யா + அத்த) யா மரங்கள் நிறைந்த

நீளிடை - நீண்ட பாலை நிலம்

எற்றி - நினைந்து

துஞ்சா நோய் - உறக்கமின்மை,விழித்திருத்தல்

கூவல் - கிணறு

குரால் ஆன் - கபிலை நிறப் பசு,அடர் பொன் நிறம் உடைய பசு

உயர்திணை ஊமன் - மாற்றுத் திறனாளி

பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல

இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும்,(கலித்தொகை 105:13-14)