குறுந்தொகை: பாடல் 225
குறுந்தொகை 225 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
கன்று தன் பய முலை மாந்த, முன்றில்
தினை பிடி உண்ணும் பெருங் கல் நாட!
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறு பெற்று மறந்த மன்னன் போல,
நன்றி மறந்து அமையாய் ஆயின், மென் சீர்க்
கலி மயிற் கலாவத்தன்ன இவள்
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே.
வரைவிடை வைத்துப் பிரிவாற்குத் தோழி சொல்லியது.
கபிலர்
பயமுலை - பயன் உடைய முலை, பாலுடைய முலை
உவந்த உதவி - தாமே வலிந்து வந்து செய்த உதவி
கட்டில் - அரசு கட்டில் அரச உரிமை
கலி மயில் - அகவும் மயில்
ஒலி - தழைத்தல்
