குறுந்தொகை: பாடல் 226
குறுந்தொகை 226 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பூவொடு புரையும் கண்ணும், வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்குறூஉம் நுதலும், நன்றும்
நல்லமன்; வாழி-தோழி!-அல்கலும்
தயங்கு திரை பொருத தாழை வெண் பூக்
குருகு என மலரும் பெருந் துறை
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே.
வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதன்
பூ - தாமரை
வேய் - மூங்கில்
விறல் - வெற்றி
வனப்பு - அழகு
பிறை - இளந்திங்கள்
மதி - அறிவு (நிலவு அன்று)
தயங்கு திரை - ஆடுகின்ற அலை
விரிநீர் - கடல்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்(குறள்.1232).
சிறுமை நமக்குஒழியச் சேண்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்(குறள்.1231)
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்(குறள்.1233).
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்(குறள்.1234)
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்(குறள்.1235).
