குறுந்தொகை: பாடல் 227
குறுந்தொகை 227 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
பூண் வனைந்தன்ன பொலஞ் சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து, இவண்-
தேரோன் போகிய கானலானே.
சிறைப்புறம்.
ஓத ஞானி
பூண் - தடி முதலியவற்றில் கட்டும் வளையம்
பொலம் - பொன்
சூடு - விளிம்பு
வாள் முகம் - வாள் போன்ற கூரிய வாய்
துமித்தல் - வெட்டுதல், துண்டாக்குதல், துணி படுத்தல்
வள் இதழ் - பெரிய இதழ்
கூழை - குறைந்து போனது,வெட்டப்பட்டது
ஏ - அசைநிலை
நன்றி: http://tamil concordance.in
