குறுந்தொகை: பாடல் 228

குறுந்தொகை 228 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

வீழ் தாழ் தாழை ஊழுறு கொழு முகை,

குருகு உளர் இறகின், விரிபு தோடு அவிழும்

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்,

திரை வந்து பெயரும் என்ப-நத் துறந்து

நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்,

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே.

கடிநகர் வேறுபடாது நன்கு ஆற்றினாய்!'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன்

வீழ் -விழுது

ஊழுறு -மலர்கின்ற

குருகு - அன்னம்

உளர்தல் - அலகால் சிறகுகளைக் கோதுதல்

விரிபு - விரிந்து

கானல் - கடல் சார்ந்த சோலை

சிறுகுடி - சிற்றூர்

என்ப - அசைநிலை

நன்றி: http://tamil concordance.in