குறுந்தொகை: பாடல் 229
குறுந்தொகை 229 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும்,
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறு செரு உறுப மன்னோ!
நல்லை மன்றம்ம பாலே-மெல் இயல்
துணை மலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம் மகிழ் இயற்கை காட்டியோயே.
இடைச் சுரத்துக் கண்டார் தம்முள்ளே சொல்லியது.
மோதாசனார்
ஓரி - ஆண்பால் மயிர்
வாங்குநள் - வளைப்பாளாய்
ஏதின்மை - அயன்மை
சிறு செரு - சிறு சண்டை
பால் - ஊழ்
துணைமலர்ப் பிணையல் - உவமை
மணம் - களவு மணம்
இயற்கை - இயல்பு
நன்றி: http://tamil concordance.in
