குறுந்தொகை: பாடல் 230
குறுந்தொகை 230 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
அம்ம வாழி, தோழி! கொண்கன்-
தான் அது துணிகுவன் அல்லன்; யான் என்
பேதைமையால் பெருந்தகை கெழுமி,
நோதகச் செய்தது ஒன்று உடையேன்கொல்லோ?-
வயச் சுறா வழங்கு நீர் அத்தம்
தவச் சில் நாளினன் வரவு அறியானே.
வலிதாகக் கூறிக் குறை நயப்பித்தது.
அறிவுடை நம்பி
அம்ம - இடைச்சொல் கேட்பித்தல்
வாழி - அசை நிலை
கொண்கன் - நெய்தல் தலைவன்
பேதைமை - அறியாமை
பெருந்தகை - பெருதகைமை, தகுதியுள்ளவன்,பெருமையுள்ளவன்
நோதக - துன்பம்,நோவு
வயச்சுறா - வலிய சுறா
நீர் அத்தம் - நீர் வழி
