குறுந்தொகை: பாடல் 231

குறுந்தொகை 231 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்;

சேரி வரினும் ஆர முயங்கார்;

ஏதிலாளர் சுடலை போலக்

காணாக் கழிபமன்னே-நாண் அட்டு,

நல் அறிவு இழந்த காமம்

வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே.

வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

சேரி - தெரு

ஆர முயங்குதல் - வேட்கை தீரத் தழுவுதல்

ஏதிலாளர் - அயலோர்

காணாக் கழிப - கண்டு செல்வார்

கலம் செய் கோவே, கலம் செய் கோவே (228:1,256:1)

மா இருந்தாழி (நற்றிணை 271:11)

மன்னர் மறைத்த தாழி (பதி.44:22)

தாழிய பெருங் காடு(புறம்.364:13)

-------------------------

கலம் செய்கோவே எனத் தொடங்கும் இரண்டு புறநானூற்றுப் பாடல்கள் உள்ளன.228 ஆவது பாடலைப் பாடியவர் ஐயூர் முடவன் ஆவார்;256 ஆவது பாடலைப் பாடியவர் பெயர் தெரியவில்லை.

நன்றி: http://tamil concordance.in