குறுந்தொகை: பாடல் 232
குறுந்தொகை 232 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
ஊண்பித்தை
உள்ளுதல் - நினைத்தல்
கொல் - அசை நிலை
வாய்ப்புணர்வு - வினை முற்றும் இடம்
மரல் - பாம்புக் கத்தாழை/கற்றாழை
புகா - உணவு
எருத்து - பிடரி
யா - மரம்
இரலை - ஆண் மான்
வரி நிழல் - நிரம்பா நிழல்
மரல் நார் உடுக்கை (நற்.64:4)
...... மரல் புரி நரம்பின்/வில் யாழ் (பெரும்பாண்.181-182)
திரங்கு மரல் நார் (மலை.431)
வரி மரல் கரிக்கும் மடப் பிணை(அகம்.133:17)
வரி மரல் திரங்கிய கானம்(புறம்.370:10)
மரல் வகுந்து தொடுத்த செம் பூங் கண்ணி.. (புறம்.264:2)
-------------------------
