குறுந்தொகை: பாடல் 233

குறுந்தொகை 233 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

கவலை கெண்டிய கல்வாய்ச் சிறு குழி

கொன்றை ஒள் வீ தாஅய், செல்வர்

பொன் பெய் பேழை மூய் திறந்தன்ன

கார் எதிர் புறவினதுவே-உயர்ந்தோர்க்கு

நீரொடு சொரிந்த மிச்சில், யாவர்க்கும்

வரைகோள் அறியாச் சொன்றி,

நிரை கோற் குறுந்தொடி தந்தை ஊரே.

பட்ட பின்றை வரையாது சென்று, வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.

பேயன்

கவலை - கிழங்கு

கெண்டுதல் - கல்லுதல்,தோண்டுதல்

மூய் - மூடி

புறவு - முல்லை நிலம்

மிச்சில் - எஞ்சிய பொருள்

வரைகோள் - தடுத்தல்

சொன்றி - சோறு

குறுந்தொடி - அன்மொழித் தொகை,தலைவி