குறுந்தொகை: பாடல் 234

குறுந்தொகை 234 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

சுடர் செல் வானம் சேப்ப, படர் கூர்ந்து,

எல்லுறு பொழுதின் முல்லை மலரும்

மாலை என்மனார், மயங்கியோரே:

குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும்

பெரும் புலர் விடியலும் மாலை;

பகலும் மாலை-துணை இலோர்க்கே.

பருவ வரவின்கண் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மிளைப்பெருங் கந்தன்

சுடர் - ஞாயிறு

எல் - ஒளி

என்மனார் - என்று கூறுவர்

குடுமி - சூட்டு, கொண்டை (உச்சிக்கொண்டை)

இயம்பும் - கூவும்

மன் - அசை நிலை

காலை அரும்பிப் பகல்எல்லாம் போதுஆகி

மாலை மலரும்இந் நோய் (குறள்.1227)

மாலையோ அல்லை மணந்தார் உயிர்உண்ணும்

வேலைநீ வாழி பொழுது (குறள் 1221)

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போ