குறுந்தொகை: பாடல் 235

குறுந்தொகை 235 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

ஓம்புமதி; வாழியோ-வாடை!-பாம்பின்

தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக்

கல் உயர் நண்ணியதுவே-நெல்லி

மரையினம் ஆரும் முன்றில்

புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே.

வரையாது பிரிந்து வருவான் வாடைக்கு உரைப்பானாய்ப் பாகற்கு உரைத்தது.

மாயேண்டன்.

ஓம்புமதி - முன்னிலை அசை

தூங்கு தோல் - தொங்குகின்ற தோல்

கடுக்கும் - ஒக்கும்

உயர் - உச்சி

நண்ணியதுவே - பொருந்தியது;ஏகாரம் - அசைநிலை(பிரிநிலை)

நெல்லி - (ஆகுபெயர்) நெல்லிக்காய்

குரம்பை - குடில்

.............புல் இலைப்/

பராரை நெல்லி அம் புளித் திரள் காய்/

கான மட மரைக் கணநிரை கவரும்(அகம்.69:6-8)

மை இல் பளிங்கின் அன்ன தோற்றப்/

பல் கோள் நெல்லிப் பைங் காய் அருந்தி,/

மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம், (அகம்.399:13-15)

நெல்லி /மரை இனம் ஆரும் முன்றில்(குறுந்.235: 3-4)

மரை பிரித்து உண்ட நெல்லி வேலி(புறம்.170:1)

செவ் வரை கொழி நீர் கடுப்ப, அரவின்

அவ் வரி உரிவை அணவரும் மருங்கின்:(அகம்.327:12-13)

கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி/

நிலம் கொள் பாம்பின் இழிதரும்/

விலங்குமலை நாடன்(குறுந்.134:5-7)

நன்றி: http://tamil concordance.in