குறுந்தொகை: பாடல் 236

குறுந்தொகை 236 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

விட்டென விடுக்கும் நாள் வருக; அது நீ

நொந்தனை ஆயின், தந்தனை சென்மோ!-

குன்றத்தன்ன குவவு மணல் அடைகரை

நின்ற புன்னை நிலம் தோய் படு சினை

வம்ப நாரை சேக்கும்

தண் கடற் சேர்ப்ப!-நீ உண்ட என் நலனே.

வரைவிடை வைத்துப் பிரிவான். ''இவள் வேறு படாமை ஆற்றுவி'' என்றாற்குத் தோழி நகையாடி உரைத்தது.

நரிவெரூஉத்தலையார்.

அன்றில் போலப்/புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை/ யானும் கற்றேன்(நற்றிணை 134:1-3)