குறுந்தொகை: பாடல் 237
குறுந்தொகை 237 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அஞ்சுவது அறியாது, அமர் துணை தழீஇ,
நெஞ்சு நப்பிரிந்தன்று; ஆயினும், எஞ்சிய
கை பிணி நெகிழின் அஃது எவனோ? நன்றும்
சேய அம்ம, இருவாம் இடையே;
மாக் கடல் திரையின் முழங்கி, வலன் ஏர்பு,
கோட் புலி வழங்கும் சோலை
எனைத்து என்று எண்ணுகோ-முயக்கிடை மலைவே?
பொருள் முற்றி மீள்வான் தேர்ப்பாகற்கு உரைத்தது
அள்ளூர் நன்முல்லையார்
அமர் துணை - விரும்புதற்குக் காரணமான துணை
தழீஇய - தழுவும்
பிரிந்தன்று - பிரிந்தது
கைபிணி - கையால் தழுவுதல்
நெகிழ்தல் - இல்லையாதல்
மலைவு - இடையூறு
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு(குறள்.1281)
