குறுந்தொகை: பாடல் 238

குறுந்தொகை 238 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை

ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,

ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்

தொண்டி அன்ன என் நலம் தந்து,

கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.

தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது.

குன்றியன்

பாசவல் - பச்சையான நெல்

காழ் - மர வயிரம்,மரத்தின் உறுதித்தன்மை

வரம்பணை - வரம்பு-எல்லை/நெல் வயலின் வரப்பு

துயிற்றி - கிடத்தி

வண்டல் - விளையாட்டு

அயரும் - அயர்(வினை.) கொண்டாடும்

தொண்டி - துறைமுகப் பட்டினம்

நலம் - பெண்மை நலம்

மகிழ்ந - மருதத் த தலைவன்

வளங்கெழு தொண்டி அன்ன இவள் நலனே(அகம்.10:13)

குறுந்.236:6,238:3-5