குறுந்தொகை: பாடல் 239
குறுந்தொகை 239 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
தொடி நெகிழ்ந்தனவே; தோள் சாயினவே;
விடும் நாண் உண்டோ?-தோழி!-விடர் முகைச்
சிலம்புடன் கமழும் அலங்கு குலைக் காந்தள்
நறுந் தாது ஊதும் குறுஞ் சிறைத் தும்பி
பாம்பு உமிழ் மணியின் தோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழவோற்கே.
சிறைப்புறம்.
ஆசிரியன் பெருங்கண்ணன்
தொடி - வளையல்
சாயின - மெலிந்தன
விடர் - பிளப்பு
முகை - முழைஞ்சு
முந்தூழ் வேலி - முள் நிறை மூங்கில் வேலி
காமக் கணிச்சி உடைக்கும் நிறைஎன்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.(குறள்.1251)
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.(குறள்.1149)
காமமும் நாணும் உயிர்காஆத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து(குறள்.1163)
