குறுந்தொகை: பாடல் 241
குறுந்தொகை 241 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம்
கெழுதகைமையின் அழுதன-தோழி!-
கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர்
மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி,
ஏறாது இட்ட ஏமப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும்
குன்ற நாடற் கண்ட எம் கண்ணே.
பிரிவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கபிலர்
கெழுதகைமை - நட்பு/உரிமை
புன் தலை - பராமரிப்பு இல்லாத தலை
ஏமம் - இன்பம்
ஏமப் பூசல் - மகிழ்ந்து எடுத்த பூசல்,பேரொலி
படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.(குறள்.1175)
மறைபெறல் ஊரார்க்கு அரிதுஎன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.(குறள்.1180)
