குறுந்தொகை: பாடல் 242

குறுந்தொகை 242 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

கானங்கோழிக் கவர் குரற் சேவல்

ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப்

புதல் நீர் வாரும் பூ நாறு புறவில்

சீறூரோளே, மடந்தை; வேறு ஊர்

வேந்து விடு தொழிலொடு செலினும்,

சேந்து வரல் அறியாது, செம்மல் தேரே.

கற்புக் காலத்துக் கடிநகர் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்குச் சொல்லியது.

குழற்றத்தன்

கானங் கோழி - காட்டுக் கோழி

கவர் குரல் - கவர்த்த குரல்

சேந்து - தங்கி

செலினும் - சிறப்புப் பொருளில் வந்தது