குறுந்தொகை: பாடல் 243
குறுந்தொகை 243 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது.
நம்பி குட்டுவன்
கவட்டிலை - பிளவுபட்ட இலை
அடும்பு - அடப்பங் கொடி
தார் - மாலை
கொழுதி - குடைதல்,மலர்த்தி
ஒண்பூ - அடம்பின் பூ
இமிழ் (வினை) - ஒலி,இனிய ஒலி
படீஇயர் - படுக,துயில்க
