குறுந்தொகை: பாடல் 244

குறுந்தொகை 244 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து,

உரவுக் களிறுபோல் வந்து, இரவுக் கதவு முயறல்

கேளேம் அல்லேம்; கேட்டனெம்-பெரும!-

ஓரி முருங்கப் பீலி சாய

நல் மயில் வலைப் பட்டாங்கு, யாம்

உயங்குதொறும் முயங்கும், அறன் இல் யாயே.

இரவுக்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தாம் காவல் மிகுதியால் புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை ஞான்று தோழி, ''வரைந்து கொள்ளின் அல்லது இவ்வொழுகலாற்றின் இனிக் கூடல் அரிது" என வரைவு கடாயது.

கண்ணன்

நள் - ஒலிக் குறிப்பு,இருள் செறிந்த எனினுமாம்

உரவு - வலிமை

இரவுக் கதவு - இரவின் பொருட்டு அடைத்த கதவு

கதவு முயறல் - கதவைத் திறக்க முயலுதலால் உண்டான ஒலி

ஓரி - ஆண் மயிலின் சூடு/கொண்டை

முருங்க - சிதைய

உயங்குதல் - அசைதல்,வாடுதல், வருந்துதல்,மெலிதல், துவளுதல்

முயங்கு (வினை.) -தழுவு, அணை,சேர்

கொற்றச் சோழர் குடந்தை வைத்த/

நாடு தரு நிதியினும் செறிய/

அருங் கடிப் படுக்குவள், அறன் இல் யாயே.(அகம்.60 :13-15)

உயக்கு நடை மடப்பிடி (குறுந்.307:5)

உயங்கு உயிர் மடப்பிடி (குறுந்.308:4)

உயங்கு பிணி(நற்.47:2)

உயங்கு பசி (நற்.137:6,322:5, அகம்.288:12,367:9)

நன்றி: http://tamil concordance.in