குறுந்தொகை: பாடல் 245

குறுந்தொகை 245 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என்

நலம் இழந்ததனினும், நனி இன்னாதே-

வாள் போல் வாய கொழு மடற் தாழை

மாலை வேல் நாட்டு வேலி ஆகும்

மெல்லம் புலம்பன் கொடுமை

பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே.

வரைவிடை, ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

மாலை மாறன்

அம் கானல் - அழகிய கானல்

ஆயம் - விளையாட்டு மகளிர்

நனி - மிகுதி(உரிச்சொல்)

இன்னாது - இன்னல் தருவது

வாள் - ஈர்வாள்

மாலை - வரிசை,நிரல்

கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி/

நடு கல்லின் அரண் போல்(பட்டினப்பாலை 78 - 79)

அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றி,/

புரை இல் தீ மொழி பயிற்றிய உரை(நற்றிணை 36:6-7)

அம்பல் ஊர் (குறுந்தொகை 51:6)

அம்பல் பெண்டிர் (அகம்.203:3)

அம்பல் மூதூர் (நற்.249:10,அகம்.218:19,347:7)

அலர்வாய்ப் பெண்டிர் (நற்றிணை 36:6,அகம்.70:6)

இன்னாது இசைக்கும் அம்பல் (குறுந். 139:5)

அம்பல் மூதூர் அலர்ந்து,/

நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே.(நற்றிணை 272:9-10)

வரையாது நெடுங்காலம் வந்தொழுக

நன்றி: http ://tamil concordance.in