குறுந்தொகை: பாடல் 246

குறுந்தொகை 246 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

''பெருங் கடற் கரையது சிறு வெண் காக்கை

களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கி,

பனிக் கழி துழவும் பானாள், தனித்து ஓர்

தேர் வந்து பெயர்ந்தது'' என்ப. அதற்கொண்டு,

ஓரும் அலைக்கும் அன்னை; பிறரும்

பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர்

இளையரும் மடவரும் உளரே;

அலையாத் தாயரொடு நற்பாலோரே.

சிறைப்புறம்.

கபிலர்

பாசடை- பசிய இலை

பனிக் கழி - குளிர்ந்த கழி

பானாள்(பால்+நாள்) - நடு இரவு

என்ப - அயலோர்

அதற்கொண்டு - அதைக் காரணமாக வைத்து

பின்னு - பின்னல்,சடை

கதுப்பு - கூந்தல்

சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை/

பெருங் களிற்றுச் செவியின் மான(குறுந்.76:3-4)