குறுந்தொகை: பாடல் 247

குறுந்தொகை 247 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

எழில் மிக உடையது; ஈங்கு அணிப்படூஉம்;

திறவோர் செய்வினை அறவது ஆகும்;

கிளையுடை மாந்தர்க்குப் புணையுமார் இவ், என

ஆங்கு அறிந்திசினே-தோழி!-வேங்கை

வீயா மென் சினை வீ உக, யானை

ஆர் துயில் இயம்பும் நாடன்

மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே.

கடிநகர்த் தெளிவு விலங்கினமை அறிய, தோழி கூறியது; வரைவு உடன்பட்ட தோழி தலைமகட்குக் கூறியதூஉம் ஆம்.

சேந்தம்பூதன்.

அணிப்படூஉம் - அண்மையில் நிகழும்,அணிமை

திறவோர் - கரணம் செய்யும் முறைகளைத் திறம்படக் கற்றோர்

புணை(பெயர்.) - தெப்பம், மிதவை

துணை(வினை.) - பற்றுக் கோடு,உதவி,ஆதரவு

அறவது - அறத்தொடு பொருந்தியது

ஆர் துயில் - ஆழ்ந்த உறக்கம்

இயம்பும் - ஒலி செய்யும்

மறு இல் நட்பு - குற்றம் அற்ற நட்பு

தண்டுடைக் கையர், வெண்தலைச் சிதவலர், (குறுந். 146:3)

அரி மதர் மழைக் கண் சிவப்ப, நாளைப்/

பெரு மலை நாடன் மார்பு புணை ஆக,/

ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி!(அகம்.312:6-8)