குறுந்தொகை: பாடல் 248

குறுந்தொகை 248 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு

உறுக என்ற நாளே குறுகி,

ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்

ஆடு அரை புதையக் கோடை இட்ட

அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை

குறிய ஆகும் துறைவனைப்

பெரிய கூறி யாய் அறிந்தனளே.

வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது.

உலோச்சன்

வரல் அன்மை - வாராதோ

ஈங்கு - இவ்வாறு

ஆகின்று - நடைபெறுகிறது

அடும்பு - அடம்பங் கொடி

இவர்(வினை.) - படர்தல், செல்லுதல்,உலாவுதல்,செறிதல்,பாய்தல்

ஊர(வினை.) - நகர,பரவ, நெருங்க

யாய் - செவிலி

ஆடு(வினை.) - அசைத்தல்

அரை - அடிப்பகுதி