குறுந்தொகை: பாடல் 249

குறுந்தொகை 249 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

இன மயில் அகவும் மரம் பயில் கானத்து,

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப,

படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக்

குன்றம் நோக்கினென்-தோழி!-

பண்டையற்றோ, கண்டிசின், நுதலே?

வரைவிடை வைப்ப, ''ஆற்றகிற்றியோ?'' என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது

கபிலர்

பயிலுதல் - நெருங்கிய, அடர்ந்த

நரை - வெண் நிறம்

ஊகம் - கருங்குரங்கு

பனிப்ப - நடுங்க

கண்டிசின் - முன்னிலை ஏவல் ஒருமை

வேட்கை ஒருதலை உள்ளுதல் மெலிதல்

ஆக்கம் செப்பல் நாணுவரை இறத்தல்

நோக்குவ எல்லாம் அவையே போறல்

மறத்தல் மயக்கம் சாக்காடு என்றுஅச்

சிறப்புடை மரபின்அவை களவுஎன மொழிப (தொல்.பொருள்.களவியல்.நூ.9)

......................................

நத் துறந்து

நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும்

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. (குறுந்.228:4-6)

வீழ் தாழ் தாழை யஊழுறு கொழு முகை /

குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும்/

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் /

திரை வந்து பெயரும் என்ப நத் துறந்து/

நெடுஞ் சேண் நாட்டார் ஆயினும் /

நெஞ்சிற்கு அணியரோ, தண் கடல் நாட்டே. (குறுந்.228)

……………………….தெண் திரைக்

கடல் ஆழ் கலத்தின் தோன்றி,

மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே. (குறுந். 240:5-7)