குறுந்தொகை: பாடல் 250

குறுந்தொகை 250 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

பரல் அவற் படு நீர் மாந்தி, துணையோடு,

இரலை நல் மான் நெறிமுதல் உகளும்

மாலை வாரா அளவை, கால் இயல்

கடு மாக் கடவுமதி-பாக!-நெடு நீர்ப்

பொரு கயல் முரணிய உண்கண்

தெரி தீம் கிளவி தெருமரல் உயவே.

தலைமகன் பாகற்கு உரைத்தது.

நாமலார் மகன் இளங்கண்ணன்

பரல் - பருக்கைக் கல்

அவல் - பள்ள நிலம்

படுநீர் - அகப்பட்டுத் தங்கிய நீர்

மாந்தி - பருகி

துணை - பெண் மான்

இரலை - ஆண்மான்

நெறி முதல் - வழியில்

கால் - காற்று

உண்கண் - மையுண்ட கண்

தெரி தீம் கிளவி - ஆராய்ந்து உரைக்கும் சொல்

தீம் கிளவி - கேள்வி/கேட்பதற்கு இனிய சொல்

தெருமரல் - சுழற்சி

உய - உய்ய

வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன்/

இன்புறு துணையொடு மறு வந்து உகள (குறுந்.65:1-2)

திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக்/

காமர் துணையொடு ஏமுற வதிய,/

காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி(அகம்.154:8-10)

இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் /

தன் நிழலைக் கொடுத்து அளிக்கும், கலை (கலித்தொகை 11:13-14)

சுனை வாய்ச் சிறு நீரை, ‘எய்தாது’என்று எண்ணி,/

பிணை மான் இனிது உண்ண வேண்டி, கலைமா தன்/

கள்ளத்தின் ஊச்சும் சுரம் என்பர், காதலர்/

உள்ளம் படர்ந்த நெறி. (ஐந்திணை ஐம்பது, 38.)