குறுந்தொகை: பாடல் 251

குறுந்தொகை 251 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

மடவ வாழி-மஞ்ஞை மா இனம்

கால மாரி பெய்தென, அதன் எதிர்

ஆலலும் ஆலின; பிடவும் பூத்தன;

கார் அன்று-இகுளை!-தீர்க, நின் படரே!

கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர்,

புது நீர் கொளீஇய, உகுத்தரும்

நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே.

பிரிவிடைத் தோழி. ''பருவம் அன்று; பட்டது வம்பு'' என்று வற்புறுத்தியது.

இடைக் காடன்.

மஞ்ஞை - மயில்

மா இனம் - மயில் கூட்டம்

பெய்தென - பெய்ததாகக் கருதி

அதன் எதிர் - அம் மழைக்கு முன்

ஆலல் - மயிலின் குரல்

இகுளை - தோழி

படர் - துன்பம்

கழிந்த மாரி - சென்ற கார்ப் பருவ மழை

உகுத்தரும் - வீழும்

நொதுமல் - அயன்மை