குறுந்தொகை: பாடல் 252

குறுந்தொகை 252 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த

கொடியன் ஆகிய குன்று கெழு நாடன்

வருவதோர் காலை, இன் முகம் திரியாது,

கடவுட் கற்பின் அவன் எதிர் பேணி,

''மடவைமன்ற நீ'' எனக் கடவுபு

துனியல் வாழி-தோழி!-சான்றோர்

புகழும் முன்னர் நாணுப;

பழி யாங்கு ஒல்பவோ காணுங்காலே?

தலைமகன் வரவறிந்த தோழி, ''அவர் நம்மை வலிந்து போயினார்க்கு எம் பெருமாட்டி தீயன கடிந்து நன்கு ஆற்றினாய்!'' என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

கிடங்கில் குலபதி நக்கண்ணன்

ஞெகிழ்த்த - நெகிழ்த்த (போலி)

காலை - வரும் நேரத்தில்/வரும் பொழுது

இன்முகம் - அக மகிழ்வு

மடவை - அறிவிலி

கடவுபு - வினவி, கேட்டு

துனியல் - வருந்தாதே

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. (குறள் 1284)

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்

காணேன் தவறல் லவை. (குறள்.1286)

நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ

புணர்ந்தூடி நிற்பேம் எனல். ( குறள்.1260)