குறுந்தொகை: பாடல் 253

குறுந்தொகை 253 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

கேளார் ஆகுவர்-தோழி!-கேட்பின்,

விழுமிது கழிவதுஆயினும், நெகிழ்நூல்

பூச் சேர் அணையின் பெருங் கவின் தொலைந்த நின்

நாள் துயர் கெடப் பின் நீடலர்மாதோ-

ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல்,

புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை

ஆறு செல் மாக்கள் சேக்கும்

கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே.

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

பூங்கண்ணன்

விழுமிது- விழுமியது - சிறந்தது

நெகிழ் நூல் - நெகிழ்ந்த நூல்

நாள் துயர் - நாள்தோறும் படும் துன்பம்

மாதோ - மாது+ஓ - அசை நிலைகள்

புகா - உணவு

உறுத்த - செறித்து வைத்த

கல் அளை - மழை முழைஞ்சு

நன்றி: http ://tamil concordance.in