குறுந்தொகை: பாடல் 254
குறுந்தொகை 254 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப,
முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின்
தலை அலர் வந்தன; வாரா-தோழி!-
துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர்;
பயில் நறுங் கதுப்பின் பாயலும் உள்ளார்-
''செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர்
எய்தினரால்'' என, வரூஉம் தூதே.
பருவம் கண்டு வற்புறுத்துந் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
பார்காப்பான்
முலை ஏர் - முலையின் அழகு
மென் முகை - மெல்லிய அரும்பு
அவிழ்ந்த - மலர்ந்த
தலை அலர் - முதலில் மலரும் மலர்
பாயல் - படுக்கை
செய் பொருள் - அறம் செய்தற்குரிய பொருள்
நசைஇ - விரும்பி
எய்தினாரால் - ஆல் அசை நிலை
வரூஉம் தூதே - இன்னிசை அளபெடை
யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்(குறுந்.116:1)
தண் நறுங்கதுப்பு(அகம்.391:6)
தாழ் கதுப்பு அணிகுவர் காதலர்(கலி.4:11)
நெறி இருங் கதுப்பொடு பெருந் தோள் நீவி(குறுந்.190:1)
கோங்கு முகைத்து அன்ன குவி முலை(அகம்.240:11)
