குறுந்தொகை: பாடல் 255

குறுந்தொகை 255 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

பொத்து இல் காழ அத்த யாஅத்துப்

பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி,

மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்

சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்

தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-

தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்

காமர் பொருட்பிணிப் போகிய

நாம் வெங் காதலர் சென்ற ஆறே.

‘’இடைநின்று மீள்வர்’’ எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.

கடுகு பெருந் தேவன்

பொத்து - பொந்து,உள்துளை

காழ - காழ்ப்புடைய

அத்த - அருவழி

யாஅத்து - யா மரத்தினது

பொரி அரை - பொரிந்த அடி மரம்

தடக்கை - பெரிய கை

வாங்கி - வளைத்து

உயங்கு நடை - பசியால் வருந்தும் நடை

பெரு நிரை - பெரிய நிரை,பெரிய கூட்டம்

இறீஇயர் - முடிக்கும் பொருட்டு

காமர் - விருப்பம்

பிணி - பற்று(பொருள் - பற்று)

வெங் காதலர் - விரும்பும் காதலர்

பிடி பசி களைஇய பெருங் கை வேழம்

மென் சினை யாஅம் பொளிக்கும் (குறுந்தொகை 37:2-4)

உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய

யாஅ வரி நிழல், (குறுந்தொகை 232:4-5)