குறுந்தொகை: பாடல் 256
குறுந்தொகை 256 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''மணி வார்ந்தன்ன மாக் கொடி அறுகைப்
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி,
மான் ஏறு உகளும் கானம் பிற்பட,
வினை நலம் படீஇ, வருதும்; அவ் வரைத்
தாங்கல் ஒல்லுமோ, பூங்குழையோய்?'' எனச்
சொல்லாமுன்னர், நில்லா ஆகி,
நீர் விலங்கு அழுதல் ஆனா,
தேர் விலங்கினவால், தெரிவை கண்ணே.
பொருள் வலிக்கப்பட்ட கிழவன் செலவழுங்கியது
மணி - நீல மணி
பிணி கால் - பிணித்த வேர்(பிணி-வினை.)
மென் கொம்பு - மெல்லிய கொம்பு (குச்சி)
பிணை - பெண் மான்
மாந்து - தின்,உண் (வேண்டிய அளவு உண்ணுதல்)
அவ் வரை - அது வரை/அக் காலம் வரை
தாங்கல் - பிரிவைப் பொறுத்தல்
வினை நலம் - தொழிலால் பெறும் நன்மை
