குறுந்தொகை: பாடல் 257

குறுந்தொகை 257 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

வேரும் முதலும் கோடும் ஓராங்குத்

தொடுத்த போலத் தூங்குபு தொடரிக்

கீழ் தாழ்வு அன்ன வீழ் கோட் பலவின்

ஆர்கலி வெற்பன் வருதொறும், வரூஉம்;

அகலினும் அகலாதாகி

இகலும்-தோழி!-நம் காமத்துப் பகையே.

வரைவு உணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

உறையூர்ச் சிறுகந்தன்

முதல் - அடிமரம்

ஓராங்கு - ஒன்று போல

தூங்குபு - தொங்கி

தொடரி - தொடர்ந்து

கீழ் தாழ்வு அன்ன - கீழே விழுதல்

ஆர்கலி - ஆரவாரம்

இகலும் - மாறுபடும்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு, இவள்/

உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே! (குறுந்.18:4-5)