குறுந்தொகை: பாடல் 258

குறுந்தொகை 258 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

வாரல் எம் சேரி; தாரல் நின் தாரே;

அலராகின்றால்-பெரும!-காவிரிப்

பலர் ஆடு பெருந் துறை மருதொடு பிணித்த

ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை,

அரியல்அம் புகவின் அம் கோட்டு வேட்டை

நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன்,

அழிசி ஆர்க்காடு அன்ன இவள்

பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே.

தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது; வாயில் நேர்ந்ததூஉம். ஆம்.

பரணர்

அரியல் - கள்

தோடு- தொகுதி

நிரைய - நிரையம்

ஆற்காடு -சோழ நாட்டு மூதூர்

தொண்டி அன்ன என் நலம்(குறுந்.238:4,ஐங் 180:4)

தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள்(ஐங்.54:3,55:2,57:2)

வெல் போர்ச் சோழன் ஆமூர் அன்ன(ஐங்.56:2)

தொண்டி அன்ன பணைத் தோள்(ஐங்.171:3)

குட்டுவன் தொண்டி அன்ன என் .....(ஐங்.178:3)

அண்ணல் யானை வெண் கோடு கொண்டு/ நறவு நொடை நெல்லின் நாள் மகிழ் அயரும் (அகம்:61:9-10)

நன்றி - http ://tamil concordance.in