குறுந்தொகை: பாடல் 259

குறுந்தொகை 259 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து,

அருவி ஆர்ந்த தண் நறுங் காந்தள்

முகை அவிழ்ந்து, ஆனா நாறும் நறு நுதல்,

பல் இதழ் மழைக் கண், மாஅயோயே!

ஒல்வை ஆயினும், கொல்வை ஆயினும்,

நீ அளந்து அறிவை நின் புரைமை; வாய்போல்

பொய்ம் மொழி கூறல்-அஃது எவனோ?

நெஞ்சம் நன்றே, நின் வயினானே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தோழி அறத்தொடு நின்று, ''யானே பரிகரிப்பல்'' என்று கருதியதனைத் தலைமகளும் நயப்பாளாகக் கூறியது.

பரணர்.

ஆனா - அமைவின்றி

நாறும் - மணக்கும்

பல் இதழ் - தாமரை மலருக்கு ஆகுபெயர்

ஒல்வை -ஒல்லுதல் பொருந்துதல்,உடன் படுதல்,ஆற்றுதல்,இசைதல்

புரைமை - உயர்வு