குறுந்தொகை: பாடல் 260
குறுந்தொகை 260 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
குருகும் இரு விசும்பு இவரும்; புதலும்
வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே;
சுரிவளைப் பொலிந்த தோளும் செற்றும்;
வருவர்கொல் வாழி-தோழி!-பொருவார்
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை
வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து,
கன்று இல் ஓர் ஆ விலங்கிய
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே.
அவர் வரவிற்கு நிமித்தமாயின கண்டு, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி சொல்லியது.
கல்லாடனார்.
செற்றும் - செறியும்
பொருவார் - பகைவர்
தொண்டையர் - தொண்டை நாட்டு அரசர்
வழை - சுர புன்னை
அமலுதல் - அடர்தல்
அடுக்கம் - பக்க மலை
விலங்குதல் - தடுத்தல்
