குறுந்தொகை: பாடல் 261
குறுந்தொகை 261 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

குறிஞ்சி
பழ மழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக் காய் எண்ணின் சில் பெயற் கடை நாள்,
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்,
நள்ளென் யாமத்து, ''ஐ'' எனக் கரையும்
அஞ்சுவரு பொழுதினானும், என் கண்
துஞ்சா வாழி-தோழி!-காவலர்
கணக்கு ஆய் வகையின் வருந்தி, என்
நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே.
இரவுக்குறிக்கண் தலைமகன் சிறைப்புறமாக, தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கழார்க் கீரன் எயிற்றி
பழமழை - கூடுதல் மழை
பதன் - பதம்
சிதட்டுக்காய் - உள்ளீடு இல்லாத எள்ளின் காய், பொக்கு,வித்து இல்லாத
ஐ - ஒலிக் குறிப்பு
காவலர் - அரண்மனைக் காவலர்
கணக்கு ஆய் வகை - நாழிகைக் கணக்கர் வேலை
கணிப்பவர் - சொல்பவர்
விழுமம் - இடும்பை
தான்,ஏ - அசைநிலைகள்
பொழுது அறிந்து அறியும் பொய்யா மாக்கள் (முல்லைப்.55)
சூதர் வாழ்த்த மாகதர் நுவல/வேதாளிகரொடு நாழிகை இசைப்ப (மதுரைக்.670 - 671)
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது (அகம்.43:6)
குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப (முல்லைப்.58)
(*குறுநீர்க் கன்னல் - நாழிகை வட்டில்/சிறிதளவு நீர் கொண்ட கடிகை)
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான் (குறுந்.181:3)
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான் (குறுந்.261:3)
