குறுந்தொகை: பாடல் 262

குறுந்தொகை 262 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

ஊஉர் அலர் எழ, சேரி கல்லென,

ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை

தானே இருக்க, தன் மனை; யானே,

நெல்லி தின்ற முள் எயிறு தயங்க

உணல் ஆய்ந்திசினால், அவரொடு-சேய் நாட்டு,

விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன்,

கரும்பு நடு பாத்தி அன்ன,

பெருங் களிற்று அடிவழி நிலைஇய நீரே.

உடன்போக்கு நேர்ந்த தோழி கிழத்திக்கு உடன்போக்கு உணர்த்தியது.

பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஊஉர் - (இன்னிசை அளபெடை)ஊரார்,ஊர் மக்கள்

சேரி - தெரு

கல் - ஒலிக் குறிப்பு (ஊர் அலர்)

ஆனாது - ஓயாது, இடைவிடாமல்

அறன் - அறம்

எயிறு - பல்லின் விளிம்பு

தயங்க - பொலிய, அழகுமிகு

ஆய்ந்திசின் - சின் - தன்மை அசை

ஆல் - அசை நிலை

விலங்கு மலை -விலங்கு - குறுக்கிடுதல்

கவாஅன் - (செய்யுளிசை அளபெடை)தாழ்வரை

நிலைஇய -(சொல்லிசை அளபெடை)தேங்கிய

அன்னாய் வாழி! வேண்டு அன்னை! நம் படப்பைத்/

தேன் மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு /

உவலைக் கூவல் கீழ

மான் உண்டு எஞ்சிய கழிலி நீரே(ஐங்.203)