குறுந்தொகை: பாடல் 263

குறுந்தொகை 263 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

மறிக் குரல் அறுத்து, தினைப் பிரப்பு இரீஇ,

செல் ஆற்றுக் கவலைப் பல் இயம் கறங்க,

தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா

வேற்றுப் பெருந் தெய்வம் பல உடன் வாழ்த்தி,

''பேஎய்க் கொளீஇயள்'' இவள் எனப்படுதல்

நோதக்கன்றே-தோழி!-மால் வரை

மழை விளையாடும் நாடனைப்

பிழையேம் ஆகிய நாம் இதற்படவே.

''அன்னை வெறி எடுக்கக் கருதாநின்றாள்; இனி யாம் இதற்கு என்கொலோ செயற்பாலது?''எனத் தோழி தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறமாகக் கூறியது.

- பெருஞ்சாத்தன்