குறுந்தொகை: பாடல் 264

குறுந்தொகை 264 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

கலி மழை கெழீஇய கான் யாற்று இகுகரை,

ஒலி நெடும் பீலி துயல்வர இயலி,

ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு

நயந்தனன் கொண்ட கேண்மை

பயந்தகாலும், பயப்பு ஒல்லாதே.

''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்கு, தலைமகள், ''ஆற்றுவல்'' என்றது.

கபிலர்

கலிமழை, கலி- முழக்கம்

கெழீஇய - பொருந்திய

கான் யாறு - காட்டாறு

இகு கரை - கரைகள் மழையால் கரைந்து தாழ்தல்

ஒலித்தல் - தழைத்தல்

பீலி - தோகை

துயல் வருதல் - அசைதல்