குறுந்தொகை: பாடல் 265

குறுந்தொகை 265 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

காந்தள்அம் கொழு முகை, காவல்செல்லாது,

வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும்

தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட

கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு,

இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்

நன்னர் நெஞ்சத்தன்-தோழி!-நின் நிலை

யான் தனக்கு உரைத்தனென் ஆக,

தான் நாணினன், இஃது ஆகாவாறே.

வரையாது பிரிந்த இடத்து, ''அவர் பிரிந்த காரணம் நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தான்'' எனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கருவூர்க் கதப்பிள்ளை

காவல் செல்லாது - காத்திராது

செம்மைச் சான்றோர் - நடுவு நிலைமை உடைய பெரியோர்

இடன் - இடம்(போலி)

நன்னர் - அன்பு ,நல்ல

ஏகல் - உயர்ச்சி, உயர்ந்த

வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் (நற்.238:3)

குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி/ வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் (அகம்.183:11-12)