குறுந்தொகை: பாடல் 266
குறுந்தொகை 266 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
நமக்கு ஒன்று உரையார் ஆயினும், தமக்கு ஒன்று
இன்னா இரவின் இன் துணை ஆகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ-
மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே?-
வரையாது பிரிந்த இடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
நக்கீரர்
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.(குறள்.107)
வல்லியோர் - வன்மை உடையோர்
கொல் - அசைச்சொல்
** இப் பாடல் சாந்தி சாதனாப் பதிப்பில்
5 அடிப்பாடல்
கழகப் பதிப்பில் 4அடிப்பாடல்
** மறப்பு அரும் பணைத் தோள் மரீஇ (266:4) என்னும் நான்காம் அடி சாந்தி சாதனாப் பதிப்பில் கூடுதலாக உள்ளது.
