குறுந்தொகை: பாடல் 269

குறுந்தொகை 269 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

நெய்தல்

சேயாறு சென்று, துனைபரி அசாவாது,

உசாவுநர்ப் பெறினே நன்றுமன் தில்ல-

வயச் சுறா எறிந்த புண் தணிந்து, எந்தையும்

நீல் நிறப் பெருங் கடல் புக்கனன்; யாயும்

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய

உப்பு விளை கழனிச் சென்றனள்; அதனால்,

பனி இரு பரப்பின் சேர்ப்பற்கு,

''இனி வரின் எளியள்'' என்னும் தூதே.

தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது

கல்லாடனார்

துனை - விரைவு

அசாவாது (அசாவி-வினை)- தளர்ச்சி அடையாது

உசாவுநர் - கேட்போர், வினவுவார்

மன்,தில்ல - அசை நிலைகள்

வயச் சுறா - வலிமை மிக்க கடல் மீன்

''நெல்லின் நேரே வெண் கல் உப்பு'' எனச்

சேரி விலைமாறு கூறலின் (அகம்.140:7-8)

''நெல்லும் உப்பும் நேரே; ஊரீர்!

கொள்ளீரோ'' எனச் சேரிதொறும் நுவலும் (அகம்.390:8-9)

உப்பை மாறி வெண்ணெல் தரீஇய (குறுந்.269:5)

கடல் விளை அமுதம்(நற்.88:4)

வணிகம் பற்றிய கட்டுரை விவரம்

த.வசந்தாள்

'செவ்வியல் தமிழ் இலக்கியங்களில் வணிகப் பதிவுகள்' தமிழியல் ஆராய்ச்சி ( தொகுதி - 37)பொற்கோ (பதிப்பாசிரியர்), சென்னை: புலமை மன்றம் , 2020

நன்றி: http://tamil concordance.in