குறுந்தொகை: பாடல் 270

குறுந்தொகை 270 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

தாழ்இருள் துமிய மின்னி, தண்ணென

வீழ் உறை இனிய சிதறி, ஊழின்

கடிப்பு இகு முரசின் முழங்கி, இடித்து இடித்துப்

பெய்க, இனி; வாழியோ, பெரு வான்!-யாமே,

செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு

இவளின் மேவினம் ஆகி, குவளைக்

குறுந் தாள் நாள்மலர் நாறும்

நறு மென் கூந்தல் மெல் அணையேமே.

வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடனிருந்து கூறியது.

பாண்டியன் பன்னாடு தந்தான்.

துமிய - துணி பட

உறை - மழைத் துளி

ஊழ் - முறை

கடிப்பு - குறுந்தடி

இடித்து இடித்து - அடுக்குத் தொடர்

தாழ்இருள், வீழ் உறை - வினைத் தொகை

மேவினம், அணையேம் - தன்மைப்பன்மை