குறுந்தொகை: பாடல் 271
குறுந்தொகை 271 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
அருவி அன்ன பரு உறை சிதறி
யாறு நிறை பகரும் நாடனைத் தேறி,
உற்றதுமன்னும் ஒரு நாள்; மற்று-அது
தவப் பல் நாள் தோள் மயங்கி,
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே.
தலைமகற்கு வாயில் நேர்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
அழிசி நச்சாத்தனார்
அன்ன - உவமை உருபு
பரு உறை - பருத்த மழைத் துளி
நிறை - வெள்ளம்
தவ - மிகுதி
வௌவுதல் - கவர்தல்
பண்பின் நோய் - தன்மையற்ற நோய்
மன், உம்,மற்று - அசை நிலைகள்
(குறுந்.169:2-3)
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று(குறள்.1146)
