குறுந்தொகை: பாடல் 272

குறுந்தொகை 272 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

தீண்டலும் இயைவதுகொல்லோ-மாண்ட

வில்லுடை வீளையர் கல் இடுபு எடுத்த

நனந் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த

புன்கண் மட மான் நேர்பட, தன்னையர்

சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக்

குருதியொடு பறித்த செங் கோல் வாளி

மாறு கொண்டன்ன உண்கண்,

நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஒரு சிறைப் பெரியன்

கொல் - ஐயம்

மாண்ட - மாட்சிமைப்பட்ட

வீளை - சீழ்க்கை

புன்கண் - துன்பம்

தன் ஐயர் - தன் தமையன்மார்

நேர்பட - நேரே நிற்க

சிலை(வினை.) - ஒலித்தல்,ஆரவாரம்

நிறம் - உயிர்நிலை

மா வீழ்த்துப் பறித்த /பழகி அன்ன சேரி மழைக் கண் (நற்.13:3-4)

கொடு வில் கானவன் கோட்டுமா தொலைச்சிப்/

பச்சூன் பெய்த பகழி போலச்/

சேஅரி பரந்த மா இதழ் மழைக் கண்(நற்.75:6-8)