குறுந்தொகை: பாடல் 273
குறுந்தொகை 273 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப்
பெருங் காடு உளரும் அசைவளி போல,
தண்ணிய கமழும் ஒண்ணுதலோயே!
நொந்தனைஆயின், கண்டது மொழிவல்;
பெருந் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல,
ஏமாந்தன்று, இவ் உலகம்;
நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே.
''பிரிவர்'' எனக் கவன்ற தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
சிறைக்குடி ஆந்தையார்
அல்கு - இரவு
முகை - அரும்பு
முதுமால்பு - பழைய ஏணி
தெளிமே - தெளிவாயாக
வீ கமழ் கானம் (அகம்:164:7)
மரம் தலை மணந்த நனந்தலைக் கானம்(நற்.394:1)
பல் பூங் கானம் (அகம்.398:20)
கலை கையற்ற காண்பு இன் நெடு வரை
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப்
பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை
அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை
திருந்து வேல் அண்ணற்கு விருந்து ( மலைபடு.315-319)
