குறுந்தொகை: பாடல் 274

குறுந்தொகை 274 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

புறவுப் புறத்தன்ன புன் கால் உகாஅத்து

இறவுச் சினை அன்ன நளி கனி உதிர,

விடு கணை வில்லொடு பற்றி, கோடு இவர்பு,

வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்

நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும்

இன்னாக் கானமும், இனிய-பொன்னொடு

மணி மிடை அல்குல் மடந்தை

அணி முலை ஆகம் முயங்கினம் செலினே.

பொருள் வலித்த நெஞ்சிற்குக் கிழவன் உரைத்தது.

உருத்திரன்

அத்து - சாரியை

கனி - உகாய் மரப் பழம்

இவர்பு - ஏறி

வருநர் - வழிச் செல்வோர்

வன் கண் ஆடவர் - ஆறலைக் கள்வர்

இன்னா மன்ற, சுரமே;

இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே(ஐங்.326:4-5)

ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும்

தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே! (ஐங்.322:4-5)

நன்றி: http ://tamil concordance.in