குறுந்தொகை: பாடல் 275

குறுந்தொகை 275 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக்

கண்டனம் வருகம்; சென்மோ-தோழி!-

எல் ஊர்ச் சேர்தரும் ஏறுடை இனத்துப்

புல் ஆர் நல் ஆன் பூண் மணிகொல்லோ?

செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு

வல் வில் இளையர் பக்கம் போற்ற,

ஈர் மணற் காட்டாறு வரூஉம்

தேர் மணிகொல்?-ஆண்டு இயம்பிய உளவே.

பருவ வரவின்கண் வரவு நிமித்தம் தோன்ற, தோழி தலைமகட்கு உரைத்தது.

ஒக்கூர் மாசாத்தி

எல் -பகல்

ஊர்ந்து - படர்ந்து

உயர்பு - உச்சி

கண்டனம் - கண்டு வருவோம்

சென்மோ - செல்லுவோம், மோ (முன்னிலை அசை )

புல் ஆர் நல் ஆன் -பசு

பூண்மணி - கழுத்து மணி

கொல்லோ - கொல்+ஓ- அசைநிலை

இயம்புதல் - ஒலித்தல்

அருந் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு (அகம்.184:5)

செம்மல் நெஞ்சம் (நற்.393:8)

செம்மல் மூதூர் (நற்.130:4,அகம்.15:7,புறம்.37:11)

குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக்/

கண்டனம் வருகம் சென்மோ தோழி (நற்.235:6-6)

நன்றி: http ://tamil concordance.in