குறுந்தொகை: பாடல் 276

குறுந்தொகை 276 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பணைத் தோட் குறுமகள் பாவை தைஇயும்,

பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும், மற்று-இவள்

உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய

தொய்யில் காப்போர் அறிதலும் அறியார்,

முறையுடை அரசன் செங்கோல் அவையத்து

யான் தற் கடவின் யாங்கு ஆவதுகொல்?

பெரிதும் பேதை மன்ற-

அளிதோ தானே-இவ் அழுங்கல் ஊரே!

தோழிக்குக் குறைமறாமல் தலைமகன் கூறியது.

கோழிக் கொற்றன்

பணை - மூங்கில்

பணைத் தோள் - பருத்த தோள்

தைஇ - செய்து,பண்ணி

பஞ்சாய் - ஒரு வகைக் கோரைப் புல்

உருத்து எழு - வடிவுற்ற

ஒளி, நிறம்

தொய்யில் - தலைவி முலையில் தலைவன் எழுதும்/ வரையும் ஓவியம்

கடவு(வினை.) - கேள்

பேதை - பேதமை

அளிதோ தானே - ஓ,தான்,ஏ அசைகள்

அழுங்கல் - ஆரவாரம்

தொய்யில்

---------------------

கலித்தொகை

54:12,97:12,111:17,117:4,125:8,142:44,143:33

தொய்யிலும்

-------------------------

கலித்தொகை 18:3

தொய்யிலை

-------------------------

அகநானூறு 177:20

தொய்யிற்கு

-----------------------

கலித்தொகை 63:8

அகநானூறு 389:1-9

நன்றி: http://tamil concordance.in